தமிழ்நாடு

வேலூர் மத்திய சிறையில் இருந்து 8 ஆயுள் கைதிகள் விடுதலை

தந்தி டிவி

வேலூர் மத்திய சிறையில் இருந்து 8 ஆயுள் கைதிகள் விடுதலை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி, வேலூரில் இருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளை ஒட்டி, தமிழகம் முழுவதும் நீண்டகாலமாக சிறையில் தண்டனை அனுபவிக்கும் கைதிகள், நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி வேலூர் மத்திய சிறையில் இருந்து, இதுவரை 33 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் உள்ளிட்ட மேலும் 8 ஆயுள் தண்டனை கைதிகள், வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் முன்விடுதலைக்கான ஆணை மற்றும் சிறையில் செய்த வேலைக்கான 5 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை வேலூர் சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் வழங்கினார். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்