தமிழ்நாடு

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணப்பை பறிப்பு - 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை

கடலூர் அருகே பெட்ரோல் பங்க்கில் ஊழியரை அரிவாளால் வெட்டி பணப்பையை பறித்து சென்ற வழக்கில் 8 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

மணிக்கொல்லை பகுதியை சேர்ந்த சிவசங்கர் புதுச்சத்திரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்-கில் பணிபுரிந்து வருகிறார். இரவு 9 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த 3 பேர், வாகனத்தில் பெட்ரோல் நிரப்பியுள்ளனர். அதற்கான தொகையை தருமாறு, சிவசங்கர் கேட்டபோது, பணம் இல்லை எனக் கூறிய இளைஞர்கள், அவரிடமிருந்த பணப்பையை பறித்தனர். சிவசங்கரிடமிருந்து பணப்பையை பறிக்க முடியாததால், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். பின்னர் பணப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சிசிடிவியில் பதிவான இந்த காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பணியிலிருந்த சக ஊழியர்கள் சிவசங்கரை, மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிவசங்கர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் , அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த புதுச்சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். விடிய விடிய போலீசார் நடத்திய, தீவிர வாகன சோதனையில், சந்தேகத்தின் அடிப்படையில் 8 பேர் பிடிபட்டடனர். அவர்களிடம் கடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுச்சத்திரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்