தமிழ்நாடு

கரூர் : 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

கரூரில் தனியார் குடோனில் 74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் சோதனை சாவடியில் கடந்த 15-ந்தேதி நடந்த வாகன சோதனையின் போது, பெங்களூருவிலிருந்து கரூர் நோக்கி சென்ற ஒரு லாரியில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, கரூரில் உள்ள குடோன்களில் போலீசார் சோதனை நடத்தியதில், 5 ஆயிரத்து 565 கிலோ எடையில் 41 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பிடிபட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது 14 ஆயிரத்து 843 கிலோ எடையில், 74 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள குட்கா பிடிபட்டுள்ளதாக கரூர் மாவட்ட போலீஸ் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 பேர் கைதான நிலையில் தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் கொங்குமணியை போலீசார் தேடி வருகின்றனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி