தமிழ்நாடு

ஜன.26ல், 72 வது குடியரசு தின விழா - மெரினா சாலையில் முப்படை ஒத்திகை

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா சாலையில், முப்படையினர் கண்கவர் அணிவகுப்பு நடத்தி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா சாலையில், முப்படையினர் கண்கவர் அணிவகுப்பு நடத்தி ஒத்திகையில் ஈடுபட்டனர். ஜனவரி 26ஆம் தேதி, 72வது குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்கு நாடு தயாராகி வருகிறது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளை மாநில அரசுகள் உத்வேகத்துடன் தயார் செய்து வருகின்றன. வழக்கப்படி, மூன்று நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடத்துவதை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே முதல் நாள் ஒத்திகை இன்று நடைபெற்றது. ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் வாகன ஒத்திகை நடந்தது. தேசிய கீதம் இசைக்கப்பட்டு இந்தியாவின் மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, முப்படையினர் மிடுக்கான அணிவகுப்பு நடத்தினர். தேசிய மாணவர் படை, மத்திய தொழிலகப் படை, ஆர்.பி.எப்., தமிழக காவல்துறை, தீயணைப்பு படை ஆகியோர் அடுத்தடுத்து அணிவகுத்தனர். சரம் தொடுத்தார் போல், காவல்துறையின் மோட்டார் சைக்கிள் ஒத்திகை கவர்ந்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்