தமிழ்நாடு

போலி கால்சென்டர் நடத்தி நூதன மோசடி - 7 பேரை கைது செய்துள்ளது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி தமிழகம் முழுவதும் பொது மக்களிடம் பணத்தை மோசடி செய்த மற்றொரு கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி

சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி தமிழகம் முழுவதும் பொது மக்களிடம் பணத்தை மோசடி செய்த மற்றொரு கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள பென்ஸ் கிளப்பில் செயல்பட்டு வந்த போலி கால் சென்டர் கண்டுப்பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர் பென்ஸ் சரவணன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வங்கி கடன் வாங்கி தருவதாக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை இந்த கும்பல் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி செல்வகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள பென்ஸ் சரவணன், பத்திரிக்கையாளர் என்ற பெயரில் உலா வந்தது தெரியவந்துள்ளது. அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி