தமிழ்நாடு

டீ கடைக்கு ரூ.61,000 EB பில் - ஓனருக்கு உண்மையிலே ஷாக்..!

தந்தி டிவி

தூத்துக்குடியில், தேநீர் கடைக்கு 61 ஆயிரம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வசவபுரத்தில் பூபதி ராஜா என்பவர் தேநீர் கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது கடையில், மின் வாரிய அதிகாரிகள் ஆன்லைன் முறையில் மின் கணக்கீடு செய்துள்ளனர். மின் வாரிய அலுவலகத்திற்கு சென்றவருக்கு, 61 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டுமென அதிகாரிகள கூறியதால் அதிர்ச்சியடைந்துள்ளார். தனது கடைக்கு அவ்வளவு கட்டணம் வர வாய்ப்பில்லை என கூறிய அவர், மின் மீட்டர் சரியில்லாததால் இவ்வளவு தொகை வந்திருக்கலாம் என தெரிவித்தார். மேலும் இப்பிரச்சனையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பூபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்