தமிழ்நாடு

கடை உரிமையாளர் வீட்டில் 50 லட்சம் திருட்டு... நண்பர்களுடன் கடை ஊழியரே செய்த சம்பவம்

சேலத்தில் கடை உரிமையாளரை கட்டிப்போட்டு 50 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கடை உரிமையாளர் வீட்டில் 50 லட்சம் திருட்டு... நண்பர்களுடன் கடை ஊழியரே செய்த சம்பவம்

சேலத்தில் கடை உரிமையாளரை கட்டிப்போட்டு 50 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகன் குமார், சேலம் செவ்வாய்பேட்டையில் அழகு சாதன பொருட்கள் மொத்த விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவரிடம் அதே மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் என்பவர், 2 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் வந்த ஓம் பிரகாஷ், மோகன் குமாரை தனியறையில் கட்டிப்போட்டு, 50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.மேலும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளை நடந்த வீட்டில் சோதனை நடத்திய செவ்வாய் பேட்டை போலீசார், விசாரணையில் இறங்கினர். அழகு சாதன பொருட்களின் ஆர்டர்களுக்கான முன்தொகை மற்றும் விற்பனை தொகையை வங்கியில் செலுத்தாமல் வீட்டிலேயே வைத்திருந்ததை அறிந்து, கடை ஊழியரே நண்பர்களுடன் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’