வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, டெங்கு காய்ச்சலால் 5 வயது சிறுமி உயிரிழந்தார்.கோனேரிக்குப்பத்தை சேர்ந்த சௌந்தர் என்பவரின் மூத்த மகள் அனிஷா, ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில், காய்ச்சலில் அவதிப்பட்டு வந்த அவர், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று உயிரிழந்தார்