தமிழ்நாடு

அதிமுக கூட்டம் - 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னையில் இன்று நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தந்தி டிவி

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதமரை வழிமொழியும் வாய்ப்பை அதிமுகவுக்கு அளித்ததற்காக மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் பணிகளை உடனடியாக தொடங்கி மக்கள் மனங்களை வென்றெடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட உறுதி ஏற்போம் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்