தமிழ்நாடு

போலி நகையை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

கன்னியாகுமரி அருகே போலி நகையை கொடுத்து தங்க வியாபாரியிடம் 5 லட்ச ரூபாய் மோசடி செய்த வடமாநில இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடி பகுதியை சேர்ந்த பழனியப்பன் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வடமாநில கும்பல் 12 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் இருப்பதாகவும், இதற்காக 5 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என கூறியுள்ளனர். இதை நம்பிய பழனியப்பன் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு 5 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் சோதனை செய்த போது தான் அது போலி நகைகள் என்பது தெரியவந்தது. தனியார் ஹோட்டலில் நகைகளை அந்த கும்பல் பழனியப்பனிடம் கொடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்