தமிழ்நாடு

ஹவாலா பணத்தை பதுக்கிய விவகாரம் : 5 போலீசார் நிரந்தர பணி நீக்கம்

ஹவாலா பணத்தை புதரில் மறைத்து வைத்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி, 5 காவலர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தந்தி டிவி

கடந்தாண்டு கடலூர் ஆல்போட்டை சோதனைசாவடியில் வாகன தணிக்கையின் போது, 20 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் மீட்கப்பட்டது. பணத்தின் ஒரு பகுதியை காவலர்கள் 5 பேர் புதரில் மறைத்து வைத்ததாக அதன் உரிமையாளர் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபணமானதை தொடர்ந்து, 5 பேரை நிரந்தர பணி நீக்கம் செய்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 5 காவலர்கள் நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட்டது, கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு