தமிழ்நாடு

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 429 காவலர்கள் மீது தாக்குதல் - அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 429 காவலர்கள் தாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தந்தி டி.வி.க்கு கிடைத்துள்ள பிரத்யேக தகவல்களை தற்போது பார்க்கலாம்...

தந்தி டிவி

2 ஆண்டுகளில் 429 காவலர்கள் மீது தாக்குதல்

குற்றவாளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி உட்பட மொத்தம் 38 காவலர்கள் காயம் அடைந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளில் மட்டும் கடந்த 2015, 16 ஆண்டுகளில் 130 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் விபத்துகளின் மூலம் சுமார் 299 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். மொத்தம் இந்த 2 ஆண்டுகளில் 429 காவல் துறையினர் பல்வேறு சம்பவங்களில் படுகாயமடைந்துள்ளனர். சென்னையை பொருத்தவரை பாதுகாப்புப் பணியில் சுமார் 22 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் கடந்த இரண்டு மாதங்களில் 20 பேர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

சென்னை அபிராமபுரம் காவல் ஆய்வாளர் அஜூ, மதுரவாயல் தலைமை காவலர் அன்பழகன் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ரவுடி ரவியை பிடிக்க செல்லும் போது மயிலாப்பூர் உதவி ஆய்வாளர் இளையராஜா தாக்கப்பட்டார். இதேபோல் செம்பியம் நுண்ணறிவு பிரிவு காவல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிவலிங்கம், பரங்கிமலை நுண்ணறிவு பிரிவு காவலர் ராஜசேகர் ஆகியோர் வழிப்பறிக் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர். இதேபோல் ஆயுதப்படை காவலர் மாரிக்கண்ணன், எழும்பூர் உதவி ஆய்வாளர் சம்பத், ராயப்பேட்டை காவலர் ராஜவேலு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த 13 சம்பவங்களில் உதவி ஆய்வாளர், தலைமை காவலர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர்.

கடந்த மே மாதம் நெல்லையில் காவலர் ஜெகதீசன் துரை என்பவர் மணல் திருட்டு கும்பலால் கொலை செய்யப்பட்டார். அதே போல் கடந்த வாரம் காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் முதல்நிலை காவலர் மோகன் ராஜ் ரவுடி கும்பலால் கொலை செய்யப்பட்டார். காவல் துறையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், மாநிலத்தின் பாதுகாப்புக்கு சமூக விரோதிகள் விடும் சவாலாகவே பார்க்கப்படுகிறது...

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு