தமிழ்நாடு

சி.பா.ஆதித்தனாரின் 40வது நினைவு நாள் - தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 40வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

தந்தி டிவி

சி.பா.ஆதித்தனாரின் 40வது நினைவு நாள் - தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 40வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயாமொழியில் கடந்த 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி சி.பா.ஆதித்தனார் பிறந்தார். தினத் தந்தி நாளிதழின் நிறுவனரான சி.பா.ஆதித்தனார், அண்ணா தலைமையிலான திமுகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராகவும், சபாநாயகராகவும், அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சமூக சேவகராகவும்,சிறந்த வழக்கறிஞராகவும் தம்மை நிலைநாட்டி கொண்ட அவர், மொழியால் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என பெரிதும் விரும்பினார். மேலும், மாணவர்கள் இடையே கல்வி நாட்டத்தை அதிகரிக்கவும் பாடுபட்டார். இந்நிலையில், அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை யொட்டி, எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, திமுக எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை