வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை செயல்படும் சந்தை என்பதால் மக்கள் கூட்டம் இங்கு அலைமோதுகிறது. அதிகாலை தொடங்கும் இந்த சந்தை இரவை தாண்டியும் ஜோராக நடக்கிறது. காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி மூலிகை செடிகள், மரக்கன்றுகள் என எல்லாம் விற்பனை செய்யும் இடமாக இந்த சந்தை செயல்படுகிறது. இறைச்சி தேவைக்காகவும், வளர்ப்பதற்காகவும் கோழிகளை வாங்கிச் செல்ல ஏராளமானோர் இங்கு வருகிறார்கள். அதேபோல் வாத்து போன்ற பறவைகளும் இந்த சந்தையில் விற்கப்படுகிறது... கூறுகளாகவும், மொத்தமாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் அவரவர் தேவைக்கு ஏற்றார் போல இங்கு வந்து வாங்கிச் செல்வோரும் உண்டு.
மிளகு, சீரகம், பருப்பு வகைகள் என எல்லாம் இந்த சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் சந்தைக்கு வந்தால் எல்லாம் மொத்தமாக வாங்கிச் செல்ல முடியும் என்பதால் பல பகுதிகளில் இருந்தும் இந்த சந்தைக்கு மக்கள் வருகிறார்கள். பல லட்ச ரூபாய் வணிகம் ஈட்டும் ஒரு சந்தையாக காரைக்கால் சந்தை செயல்படுகிறது என்பது வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியான விஷயமும் கூட...