தமிழ்நாடு

40 ஆடுகளை கடித்த தெருநாய்கள் - 25 ஆடுகள் உயிரிழப்பு

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே 40க்கும் மேற்பட்ட ஆடுகளை தெருநாய்கள் கடித்த‌தில், 25 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. தேவிகாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் சுமார் 45க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் இரண்டு பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஆடுகளை, நான்கு தெருநாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துள்ளன. இதில், 25 ஆடுகள் உயிரிழந்த நிலையில், 15 ஆடுகள் பலத்த காயமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இறந்த ஆடுகளின் மதிப்பு 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்பதால், நிவாரணம் வழங்க வேண்டும் என உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்