தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் நகை பறிக்க முயன்ற பெண்கள்

ஓடும் பேருந்தில் நகை பறிக்க முயன்ற பெண்களை, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

கோவை டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றில், கைக்குழந்தையுடன் 4 பெண்கள் ஏறியுள்ளனர். கூட்டமாக இருந்த அந்த பேருந்தில், முன்பக்க சீட்டில் இருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்ற போது, சக பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த, 4 பேரும், பேருந்தில் இருந்து குதித்து தப்பியோடி உள்ளனர். தொடர்ந்து அவர்களை விரட்டிச் சென்று பிடித்த பொதுமக்கள், தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.இதையடுத்து 4 பெண்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்