தமிழ்நாடு

வட இந்தியாவில் வீசும் வெப்பக் காற்று - தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி

கோவையில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட 4 பேர், கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி

கோவை மற்றும் குன்னூரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் காசி, அலகாபாத், கயா, திரிவேணி சங்கமம் மற்றும் ஆக்ராவுக்கு ஒரு குழுவினர் சென்றுள்ளனர். காசி உள்ளிட்ட பகுதிகளில் புனித பயணத்தை முடித்து விட்டு, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சுப்பையா உள்ளிட்ட 4 பேர் நேற்று பிற்பகலில் ஆக்ரா ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். ரயில் 2 மணி நேரம் தாமதமாக வந்த நிலையில், கடும் வெப்பம் காரணமாக மாலை 5 மணி அளவில் ஜான்சி ரயில் நிலையத்தில் பாலகிருஷ்ணன் சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.

அவரை தொடர்ந்து இரவு 11 மணி அளவில் அதே ரயில் பயணம் செய்த சுப்பையா உள்ளிட்ட மற்ற 3 பேரும் கடும் வெப்பம் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இது குறித்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், உத்தரபிரதேசம் சென்றுள்ளனர். இந்த மரணம் குறித்து, தந்தி டி.விக்கு தொலைபேசியில் பேசிய நந்தகுமார் என்பவர், வெப்பத்தின் தாக்கம் குறித்து மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்க முடியும் என கூறினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்