தமிழ்நாடு

சொத்து தகராறில் விபரீதம் - 4 பேரை கைது செய்தது காவல்துறை

சொத்து தகராறில் உறவினரை வீட்டிற்குள் வைத்து, தீ வைத்து எரித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

கொடைக்கானல் அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா என்ற முனியாண்டியின் மூத்த மனைவி கருப்பாயிக்கு, மணி என்ற மகன் உள்ளார். இரண்டாவது மனைவி சிலம்பாயிக்கு, முத்துலட்சுமி என்ற மகள் உள்ளார். முத்துலட்சுமியை எருக்கம்மாள்பட்டியை சேர்ந்த ஆண்டியப்பன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கருப்பாயின் மகன் மணி தனியாக வசித்து வந்த நிலையில் சொத்துக்களை முத்துலட்சுமியும் அவரது கணவரும் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த சொத்தை திருப்பிக்கேட்டு மணி வலியுறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஆண்டியப்பன் மறுப்பு தெரிவித்த நிலையில், அவரை வீட்டிற்குள் வைத்து, மணி மற்றும் உறவினர்கள் எரித்துள்ளனர். இந்த வழக்கில், மணி, பால்ராஜ், ஜோசப் மற்றும் விஸ்வநாதன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்