தமிழ்நாடு

இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு...

விருத்தாசலம் அருகே இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 4 பொறியாளர்கள் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

விருத்தாசலம் அருகே இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 4 பொறியாளர்கள் உயிரிழந்தனர். வட்டாட்சியர் உள்பட மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த நவீன்சாமுவேல் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், அதே நிறுவனத்தில் பணிபுரியும் பூபதி உள்பட 4 பேருடன், காரில் திருச்சிக்கு சென்றிருந்தார். அங்கிருந்து ஐந்து பேரும் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தபோது, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கழுதூர் என்ற இடத்தில் காரின் முன்பக்க டயர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையில் ஏறி, மறுபுற சாலையில் தறிகெட்டு ஓடி,மற்றொரு கார் மீது நேருக்கு நேர் மோதியது. இரண்டு கார்களின் முன்பகுதி நொறுங்கிய இந்த பயங்கர விபத்தில், நவீன்சாமுவேல், பூபதி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொருவர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மற்றொரு காரில் வந்த ராமநாதபுரம் மாவட்டம் மஞ்சபட்டினம் கிராமத்தை சேர்ந்த தாசில்தார் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் சரவணபெருமாள், சுந்தர்ராஜன், ராஜபதி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்