இந்த விபத்தில் இரண்டு பேர் பலத்த காயங்களுடனும் , 7 பேர் லேசான காயங்களுடனும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். தகவறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ள நிலையில், ஆபத்து நிறைந்த பட்டாசு ஆலைக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.