தமிழ்நாடு

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யார்?

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ளது.

தந்தி டிவி
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த 109 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேர்காணல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, 4 தொகுதிகளில் பணியாற்ற வேண்டிய கட்சி நிர்வாகிகள் பற்றி முடிவு செய்யப்பட்டது. மேலும், வேட்பாளர்கள் தேர்வும் முடிந்ததாக கூறப்படுகிறது. எனவே, விரைவில் 4 தொகுதி அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி

Breaking | Cylinder | ``இனி சிலிண்டர் ஈஸியா வாங்கலாம்..'' | மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்

BREAKING || சுந்தர்.சி-ன் சொத்து விவரங்கள் - வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

Nomination | ECI | TN Election | சூடுபிடித்த தேர்தல் களம் - "இன்னும் ஒரு நாள் மட்டுமே.."

BREAKING || "போட்டியா? இல்லையா?" கடைசி நேரத்தில் திடீர் யோசனையில் திருமா