தமிழ்நாடு

ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் பலி - குளிக்க சென்ற போது நேர்ந்த சோகம்...

திண்டிவனம் அருகே ஏரியில் மூழ்கி, நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது குழந்தைகள் திருமுருகன், அபிராமி மற்றும் தனது மைத்துனரின் குழந்தைகள் ஆகாஷ், அஸ்வின் ஆகியோருடன் அங்குள்ள சலவாதி ஏரியில் குளிக்க சென்றுள்ளார். நான்கு குழந்தைகளும் ஏரியில் ஒன்றாக குளித்து கொண்டிருந்தனர். ஏரியின் கரையில் பாஸ்கர் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். திடீரென, நான்கு குழந்தைகளும் ஏரி நீருக்குள் மூழ்க தொடங்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினார்கள். எனினும், நான்கு குழந்தைகளும் உயிரிழந்ததால், சடலங்களாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இறந்த குழந்தைகளின் உடல்களை பார்த்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்