கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 3,000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நன்னிலம், இலவங்கார்குடி, பெரும்புகலூர் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று பெய்த கனமழையால் வயலில் மழைநீர் தேங்கி பயிர்கள் சாய்ந்தன. இந்த சூழலில், வேளாண் அதிகாரிகள் உடனடியாக நிலத்தில் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.