தமிழ்நாடு

300 கிராம் தங்க நகை கொள்ளை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது

சென்னையில் கொள்ளை வழக்கில் கைதானவர் அல்உம்மா இயக்கத்துடன் தொடர்பு உடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தந்தி டிவி

300 கிராம் தங்க நகை கொள்ளை வழக்கு - முக்கிய குற்றவாளி கைது

சென்னையில் கொள்ளை வழக்கில் கைதானவர் அல்உம்மா இயக்கத்துடன் தொடர்பு உடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.சென்னை பட்டாளம் பகுதியை சேர்ந்த சுராஜி, சௌக்கார்பேட்டை பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். சுராஜை மர்ம நபர்கள் தாக்கி ஏழரை லட்சம் பணம் மற்றும் 300 கிராம் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இந்த வழக்கில் ராயப்பேட்டையை சேர்ந்த சபியுல்லா யாசின் என்பவரை கைது செய்து, 6 லட்சம் ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருவொற்றியூரில் பதுங்கியிருந்த நூருதீன் ரபீக் என்பவர் பிடிபட்டார். கைதான ரபீக், அல்உம்மா இயக்கத்துடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. இவர் மீது கள்ளநோட்டு தயாரித்தது, ரயிலில் துப்பாக்கி கடத்தியது உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர் என்பது தெரியவந்துள்ளது. மொத்தமாக இவர் மீது 13-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை