தமிழ்நாடு

திடீரென தீப்பிடித்த 3 லாரிகள்...4 மணி நேரம் போராட்டம் - நள்ளிரவில் அதிர வைத்த சம்பவம்

தந்தி டிவி

நாமக்கல் அருகே நள்ளிரவில் லாரிகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது...முதலைப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் பிரபல தனியார் டயர் விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தீபாவளியைக் கொண்டாட ஓட்டுநர்கள் சொந்த ஊருக்கு செல்ல அந்த நிறுவனத்தின் அருகே லாரிகளை நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் ஜவுளி துணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு லாரி, ஒரு டேங்கர் லாரி மற்றும் பொருட்கள் ஏதும் இல்லாமல் இருந்த மற்றொரு லாரி என 3 லாரிகள் திடிரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரத்திற்கு போராட்டத்திற்கு பிறகு முழுமையாக தீயை அணைத்தனர்... சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்