தமிழ்நாடு

வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த விவகாரம்: மேலும் 3 பேர் பணியிடை நீக்கம்

மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் ஆவணங்களை எடுப்பதற்காக சென்ற புகாரின் பேரில், கலால் வரித்துறை வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தந்தி டிவி
மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் ஆவணங்களை எடுப்பதற்காக சென்ற புகாரின் பேரில், கலால் வரித்துறை வட்டாட்சியர் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் சம்பூர்ணத்துடன் சென்ற அந்தத்துறையின் ஆவணப்பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டல அதிகாரிகளான ராஜ பிரகாஷ், சூரிய பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் நான்கு பேரும் அனுமதி இல்லாமல் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குச் சென்றது தொடர்பாக, மதுரை மேற்கு தொகுதி உதவி தேர்தல் அலுவலர் குருசந்திரனிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் நடராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்