தமிழ்நாடு

பிறந்து 3 நாளே ஆன குழந்தை... பெற்றவளுக்கு மயக்க மருந்து கொடுத்து.. பிள்ளையை தூக்கி சென்ற கொடூர அரக்கி... "அடி வயிறு வலிக்க அழுத தாய்..."

தந்தி டிவி

வேலூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மனைவி சூரியகலா. இவருக்கு, அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மூன்று நாட்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர், சூரியகலா கருத்தடை செய்வதற்கான சிகிச்சையில் சூரியகலா இருந்த போது, விலாசம் தெரியாத பெண் ஒருவர் சூரியகலாவுக்கு உணவு கொடுத்துள்ளார். அதன்பின்னர் சூரியகலா மயங்கியதும், பச்சிளம் குழந்தையை அந்த பெண் தூக்கிச் சென்றுள்ளார். இதனை, மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்னர். அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி