ஆக்சிஜனுடன் கூடுதலாக 2400 படுக்கைகள் - தமிழக சுகாதாரத் துறை தகவல்
சென்னை அண்ணாநகர் பெரிபெரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி கலன் சோதனை முறையில் அமைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது ஒரு நிமிடத்திற்கு 150 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என கூறியுள்ள சுகாதாரத்துறை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 400 கூடுதல் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது நிலவரப்படி 3 ஆயிரத்து 319 படுக்கைகள் உள்ளன.