#anaconda #python திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை புதூர் குளத்தில், சுமார் 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். நகரி - திண்டிவனம் அகல ரயில் பாதை பணிக்காக மலைகள் உடைக்கப்பட்டதால், அங்கிருந்த வன உயிரினங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கோரைப்புற்கள் நிறைந்த குளத்தில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மலைப்பாம்பை பிடிக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.