தமிழ்நாடு

ஈரோடு : ஒரே பகுதியில் 2 கிராம மக்கள் போராட்டம் - போலீசார் குவிப்பு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரே பகுதியில் 2 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஒரே பகுதியில் 2 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. ஓட்டப்பாறைக்கு செல்லும் குடிநீர் குழாயில் கடந்த 3 தினங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய மண்ணை தோண்டியபோது, யாரோ சிறிய அளவிலான பைப் பொருத்தி தண்ணீர் செல்லவிடாமல் செய்திருப்பது தெரியவந்த‌து. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டப்பாறை கிராம மக்கள், அருகே உள்ள முகாசிபிடாரியூரை சேர்ந்தவர்கள் மீது குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நாகராஜ் என்பவரை ஓட்டப்பாறை கிராம மக்கள் அடித்து விட்டதாக கூறி, முகாசி பிடாரியூர் கிராம மக்கள் அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் குவிக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்