தமிழ்நாடு

மாற்றுத் திறனாளியான 2 மகன்கள்.. ஓலை குடிசையில் பரிதவிக்கும் தாய் - உணவுப் பொருட்கள் வழங்கிய சிற்பக் கலைஞர்

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து மாற்றுத்திறனாளி மகன்களுடன் பரிதவித்த தாய்க்கு, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் உணவுப்பொருட்கள் வழங்கி உதவி செய்துள்ளார்.

தந்தி டிவி

மாற்றுத் திறனாளியான 2 மகன்கள்.. ஓலை குடிசையில் பரிதவிக்கும் தாய் - உணவுப் பொருட்கள் வழங்கிய சிற்பக் கலைஞர்

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து மாற்றுத்திறனாளி மகன்களுடன் பரிதவித்த தாய்க்கு, மாமல்லபுரம் சிற்பக் கலைஞர் உணவுப்பொருட்கள் வழங்கி உதவி செய்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கருமாரபாக்கத்தில் வசித்து வருபவர் சாந்தி. விவசாய கூலியான இவருக்கு மூளைவளர்ச்சி இல்லாத ஜான்சன், ரூபன் என இரு மகன்கள் உள்ளனர். ஓலை குடிசை வீட்டில் வசித்து வரும் சாந்தி, வறுமையில் வாடி வருவதை அறிந்த மாமல்லபுரம் சிற்பக்கலைஞர் பாலன் அறிவுமணி என்பவர், அரிசி, மளிகை என உணவுப்பொருட்கள் வழங்கி உதவி செய்துள்ளார். இதேபோல, கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஊடல் ஊனமுற்றோர் பலருக்கும் அரிசி, மளிகை உணவுப் பொருட்கள் வழங்கி சிற்பி பாலன் அறிவுமணி உதவி செய்துள்ளதை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்