தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வெளிநாட்டில் உள்ள இரண்டு வீராங்கனைகளை புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பயிற்சிக்கு வந்த தடகள வீராங்கனைகளிடம் அத்துமீறியதாக பயிற்சியாளர் நாகராஜன் கடந்த 29ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது இதுவரை 6 வீராங்கனைகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். இதில் 2 வீராங்கனைகள் வெளிநாட்டில் இருந்தபடி நாகராஜன் மீது புகார் அளித்துள்ளனர். நாகராஜன் கைதானதை அறிந்த அவர்கள், தங்களுக்கு அவரால் நேர்ந்த அத்துமீறல்கள் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளனர். நாகராஜனிடம் பயிற்சி பெறும்போது தேசிய மற்றும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தயார்படுத்த வேண்டும் என்றால் தனக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக வீராங்கனைகள் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்...