தமிழ்நாடு

செல்போன் கடை உரிமையாளரை தாக்கிய தி.மு.க.வினர்...

திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடியில் உள்ள கடையொன்றில் செல்போன் பழுதை சரி செய்ய சென்ற தி.மு.க.வினர் 2 பேர் கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
திருவண்ணாமலை மாவட்டம் தாணிப்பாடியில் உள்ள கடையொன்றில் செல்போன் பழுதை சரி செய்ய சென்ற தி.மு.க.வினர் 2 பேர், கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தாக்குதலில் படுகாயம் அடைந்த செல்போன் கடையின் உரிமையாளர் மணிவண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில், தி.மு.க.இளைஞர் அணி அமைப்பாளர் ரகுபதி மாசிலாமணி மற்றும் கணேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். செல்போனை பழுது நீக்கி தர முடியாது என மணிவண்ணன் கூறியதால் ஆத்திரமடைந்த 2 பேரும் அவரையும், கடை ஊழியர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்