Nagai | கேட்டை பிடித்தபடியே பலியான 2 உயிர்கள் - பாட்டியை காப்பாற்ற சென்ற பேரனுக்கு நேர்ந்த கதி
நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி பகுதியில் மின்சாரம் தாக்கி பாட்டியும், அவரைக் காப்பாற்ற முயன்ற 13 வயது பேரனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எட்டுக்குடியைச் சேர்ந்த இந்திராணி என்ற மூதாட்டி, குளத்தில் குளித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியபோது இரும்பு கேட்டைத் திறக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கேட்டைப் பிடித்தபடியே நின்ற பாட்டியை, அவரது பேரன் வேல்முருகன் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது சிறுவனையும் மின்சாரம் தாக்கிய நிலையில் பாட்டி இந்திராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பேரன் வேல்முருகன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருக்குவளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.