திருவொற்றியூர் அடுத்த திருச்சினாங்குப்பத்தில், பட்டாசு வெடித்தது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், இரண்டு பேர் காயம் அடைந்தனர். கலவரத்தின் போது, ஒரு தரப்பு, மற்றொரு தரப்பினரின் இரு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பொருட்களை சூறையாடிச் சென்றனர். இதன் காரணமாக திருச்சினாங்குப்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.