தமிழ்நாடு

வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல் : பொறியியல் பட்டதாரிகள் 2 பேர் கைது

நிலத்தகராறு குறித்து, விசாரிக்க வந்த வருவாய் ஆய்வாளரை தாக்கிய பொறியியல் பட்டதாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
நிலத்தகராறு குறித்து, விசாரிக்க வந்த வருவாய் ஆய்வாளரை தாக்கிய பொறியியல் பட்டதாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சேலம், சங்ககிரி வட்டம் காவேரிப்பட்டி அருகே அண்ணாமலை என்பவருக்கும், மாரியம்மன் கோவில் நிர்வாகிகளுக்கும், நிலப்பிரச்சனை எழுந்தது. அப்போது, ஆய்வு செய்ய வந்த வருவாய் ஆய்வாளரை, அண்ணாமலையின் இளைய மகன் பூபதி செல்போனில் வீடியோ எடுத்தார். அவரது செல்போனை, வருவாய் ஆய்வாளர் பறிக்க முற்பட்ட போது பூபதி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தேவூர் போலீசார், பூபதி மற்றும் அவரது உறவினர் சதிஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்