தமிழ்நாடு

பெண் சர்ச்சையில் சிக்கிய திமுக பிரமுகர் மீது மேலும் 2 வழக்கு - நில அபகரிப்பு புகார் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

பெண் சர்ச்சையில் சிக்கிய வாணியம்பாடி திமுக பிரமுகர் மீது நில அபகரிப்பு புகார் உள்ளிட்ட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

தந்தி டிவி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர திமுக பொறுப்பாளராக இருந்த சாரதி குமார் மீது அவரது மனைவி புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள், ஆடியோ ஆதாரங்கள் வெளியான நிலையில் அவரை கட்சி மேலிடம் பொறுப்பில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சாரதிகுமார் மற்றும் அவரது தாய் உமாபாய் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் வாணியம்பாடியை சேர்ந்த யோகம்மாள் என்ற பெண்ணுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சாரதிகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் அபகரித்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் சாரதி குமார் உள்ளிட்டோர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே தலைமறைவாக உள்ள சாரதிகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்