தமிழ்நாடு

குடிநீர் திருட்டை தட்டிக்கேட்டவர்கள் கைது? :பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே குடிநீர் திருட்டை தட்டிக்கேட்ட இருவரை போலீசார் கைது செய்ததாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே குடிநீர் திருட்டை தட்டிக்கேட்ட இருவரை போலீசார் கைது செய்ததாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொக்குமேடு கிராமத்தில் தனிநபர்கள் சிலர் விவசாய நிலங்களில் ஆழ்துளை மோட்டார்கள் அமைத்து அதிலிருந்து தண்ணீர் உறிஞ்சி லாரிகளில் விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்றிரவு நிலத்தடி நீரை உறிஞ்சிய ஆழ்துளை மோட்டார்களை அடித்து உடைத்தனர். இது குறித்து நில உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சோழவரம் போலீசார் கிராமத்தில் இருந்து இருவரை காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சோழவரம் - அருமந்தை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் விடுவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்