தமிழ்நாடு

நடிகை ஜெயபாரதி வீட்டில் நகைகள் திருட்டு - காவலாளி, தனியார் கார் ஓட்டுநர் கைது

நடிகை ஜெயபாரதி வீட்டில் 31 சவரன் நகைகளை திருடியதாக காவலாளி மற்றும் தனியார் கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை நுங்கம்பாக்கம் சுப்பாராவ் தெருவில் குடியிருப்பவர் நடிகை ஜெயபாரதி. இவர் முத்து, மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவரது வீட்டில் காவலாளியாக உள்ள நேபாளத்தைச் சேர்ந்த ஹர்க்பகதூரும், தனியார் கார் ஓட்டுனர் இப்ராகிமும் இணைந்து சிறுக சிறுக நகைகளை திருடி விற்று வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெயபாரதி அளித்த புகாரை தொடர்ந்து இருவரையும் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அடகு கடையில் விற்கப்பட்ட 31 சவரன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்