தமிழ்நாடு

போலி பாஸ்போர்ட் : இளம்பெண்களை அழைத்து வந்த 2 பேர் கைது

சென்னை விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் மூலம், இளம்பெண்களை அழைத்து செல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
சென்னை விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் மூலம், இளம்பெண்களை அழைத்து செல்ல முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். வங்கதேசத்தை சேர்ந்த மக்பூர் மசூத், மமூன் மியா ஆகியோர் 13 மற்றும் 18 வயது பெண்களுடன், மலேசிய விமானத்திற்காக காத்திருந்த போது, அவர்களது பாஸ்போர்ட்டுகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 பெண்களின் பாஸ்போர்ட்டுகளும் போலியானது என தெரியவந்தது. இருவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும், பர்மாவை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரும் விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், அந்த 2 இளம் பெண்களும் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை போலி பாஸ்போர்ட்டில் அழைத்து செல்ல முயற்சித்தது ஏன் என்ற கோணங்களில் விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்