தமிழ்நாடு

"19 ஆயிரம் கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவர்" - அமைச்சர் முன்னிலையில் பகிரங்கமாக தெரிவித்த ஆட்சியர்

பிளஸ்-2 தேர்வில் கூட தகுதி பெறாத போலி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு செய்துள்ளதாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

தந்தி டிவி
பிளஸ்-2 தேர்வில் கூட தகுதி பெறாத போலி பெண் மருத்துவர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆயிரம் கருக்கலைப்பு செய்துள்ளதாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஆரணி அடுத்த சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆட்சியர் கந்தசாமி, டெல்லியில் நடைபெற்ற பெண்கள் சராசரி விகித கருத்தரங்கில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டதாக வேதனையுடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்றிருந்தார். அவரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியரே இவ்வாறு பேசியிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்