#busvideo | #chennai சென்னை மக்களை கொதிக்க வைத்த 15ஜி பஸ் வீடியோ - விசாரணையில் இறங்கிய போலீஸ் சென்னையில் மாநகரப் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்து, சாலையில் கத்தியால் கிழித்துச் சென்ற கல்லூரி மாணவர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. 15ஜி வழித்தடப் பேருந்தில் பயணித்த மாணவர்கள், லைக்ஸ் பெறுவதற்காக இத்தகைய ஆபத்தான செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் எனக் குறிப்பிடப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சென்னை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் சமீபத்தில் நடந்ததா அல்லது பழைய வீடியோ மீண்டும் பதிவேற்றப்பட்டதா என்றும் விசாரித்து வருகின்றனர்.