தமிழ்நாடு

ஆடிட்டர் வீட்டில் 150 சவரன் அபேஸ் - 2000 சிசிடிவி.. 3000 பேர்.. கடைசியில் சிக்கிய 'அணில்'

தந்தி டிவி

ஈரோட்டில், ஆடிட்டர் வீட்டில் 150 சவரன் தங்க நகை கொள்ளையடித்த சம்பவத்தில், ஆந்திரா இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம், ஈரோடு மாவட்டம் நசியனூர் சாலை பகுதியில் வசிக்கும் ஆடிட்டர் துரைசாமி என்பவரது வீட்டில், 150 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கொள்ளையன் ஆந்திராவை சேர்ந்த அணில்குமார் என்பதை கண்டறிந்த போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 150 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அணில்குமார் மீது பல்வேறு மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையனை பிடிக்க, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் தெரிவித்தார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்