சொத்து வழக்கில் தண்டனை பெற்று கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த 2 ஆண்டுகளாக இளவரசி இருந்து வருகிறார். இந்த நிலையில் இளவரசியின் சகோதரர் வடுகநாதன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே அவரை பார்த்துக் கொள்ள வேண்டி இருப்பதால் தனக்கு 15 நாட்கள் பரோல் வேண்டும் என இளவரசி விண்ணப்பித்து இருந்தார். இளவரசியின் மனுவை ஏற்றுக் கொண்ட சிறைத்துறை நிர்வாகம் அவருக்கு பல நிபந்தனைகளை விதித்து பரோல் வழங்கியது. இதையடுத்து அவர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியே வந்தார். பரோல் முடிந்து நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அவர் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.