தமிழ்நாடு

இருதரப்பினரிடையே மோதல் உருவாகும் அபாயம் : வ.களத்தூர் கிராமத்தில் 144 தடை உத்தரவு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே இரு தரப்பினர் இடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
வ.களத்தூர் கிராமத்தில் நிலவிய பதற்றமான சூழலால் அங்குள்ள செல்லியம்மன் கோவில் திருவிழாவை ஒரு நாள் மட்டும் நடத்துமாறு அப்பகுதி மக்களுக்கு காவல்துறையினர் உத்தரவிட்டிருந்தனர். இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு மூன்று நாள்கள் திருவிழா நடத்த அனுமதி பெற்றனர். இந்நிலையில், சாமி ஊர்வலத்தை தங்கள் வீதி வழியாக கொண்டு செல்ல கூடாது என கூறி ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் தொடர்கிறது. இதையடுத்து கிராம‌ம் முழுவதும் நேற்று இரவு முதல் வருகிற அக்டோபர் நான்காம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வருவாய்துறையினர், காவல்துறையினர் என 300க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை