தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது...

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 14 வயதே ஆன ஒரு சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளதால் சிறுமி மற்றும் குழந்தையை, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் நேரில் பார்வையிட்டனர்.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் வசித்து வந்த 13 வயது சிறுமிக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் ஊத்துக்குளி பகுதியில் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. 14 வயதேயான சிறுமிக்கு குழந்தை பிறந்த தகவலறிந்த குழந்தை பாதுகாப்பு அமைப்பினர், குழந்தையையும் சிறுமியையும் நேரில் பார்த்தனர். குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்