தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 86 லட்சம் தடுப்பூசிகளில் தற்போது 14 லட்சம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இதுவரை 20 கோடியே 76 லட்சத்து 10 ஆயிரத்து 230 தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருபதாகவும், அதில் இதுவரை 18 கோடியே 71 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. இப்போது மாநிலங்களிடம் 2 கோடியே 4 லட்சத்து 96 ஆயிரத்து 575 தடுப்பூசிகள் கைவசம் உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்திற்கு 86 லட்சத்து 55 ஆயிரத்து 10 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் இதுவரை 72 லட்சத்து 35 ஆயிரத்து 714 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், 14 லட்சத்து 19 ஆயிரத்து 296 தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.