தமிழ்நாடு

கரடு முரடான மலைப்பாதையில் 14 கி.மீ. நடந்த கலெக்டர்

தந்தி டிவி

வாணியம்பாடி அருகே சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு 14 கிலோ மீட்டர் நடந்தே சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். திருப்பத்தூர் மாவட்டம் நெக்னாமலை கிராமம் தரை மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததை அறிந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் 14 கிலோ மீட்டர் நடந்தே சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டார். அவரை மலைகிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் நெக்னாமலை கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்தார்.

Tiruvannamalai | தி.மலை இடுக்கு பிள்ளையார் கோயில் சம்பவம்.. வந்தது புதிய கட்டுப்பாடுகள்

Karur | CM Vijay | கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. தமிழக அரசு விளக்கம்

CM Vijay | Law and Order | சட்டம் ஒழுங்கு - CM விஜய் அதிரடி

Uttar Pradesh | சிறுவனின் பிறப்புறுப்பில் சூடு வைத்த கொடூர ஆசிரியை.. கதறும் பெற்றோர்

Police Arrest | சென்னை முழுக்க சல்லடை போட்டு - 92 பேரை தூக்கிய போலீஸ்