தமிழ்நாடு

தாய்லாந்து பெண்ணிடம் 1.3 கிலோ தங்கம் பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்த பெண் பயணியிடம் ரூ 46 லட்சம் மதிப்புடைய 1 கிலோ 385 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
தாய்லாந்தில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்த பெண் பயணியிடம் ரூ 46 லட்சம் மதிப்புடைய 1 கிலோ 385 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பெண்ணை சோதித்தவர்கள் மேல் உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட தங்கத்தை கண்டுபிடித்தனர். பெண் அளித்த வாக்குமூலத்தை அடுத்து அவரை பின் தொடர்ந்து தங்கத்தை வாங்க வந்த சண்டிகரை சேர்ந்த லவ்லின் கசப் என்பவரையும் சுங்க இலாகா அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். அதே போல் சுங்க இலாகா பகுதியில் பிளாஸ்டிக் பொருளில் கேட்பாரற்று கிடந்த ரூ 23 லட்சம் மதிப்புடைய 700 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..