தமிழ்நாடு

7ம் வகுப்பு மாணவியை கொன்ற 12ம் வகுப்பு மாணவன்...

7 ஆம் வகுப்பு மாணவியை, 12ஆம் வகுப்பு மாணவன் பலாத்காரம் செய்து, மின்சாரம் பாய்ச்சி கொன்ற சம்பவம் திண்டுக்கல் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா ஜி.குரும்ப‌ப்பட்டி கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஏப்ரல் 16 ஆம் தேதி, கூலி வேலை செய்யும் தந்தையும், தாயும் வேலைக்கு சென்ற விட, கோடை விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார் அந்த மாணவி...வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகள், வாயில் மின்வயரை கடித்தவாறு, சடலமாக கிடந்த‌தை கண்டு மாணவியின் தாய் அதிர்ச்சியில் உறைந்தார். தாயின் கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர்... சுட்டித்தனமாக ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருக்கும் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உயிரிழந்த சிறுமியின் உடலில், பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் தென்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த ஊர்மக்கள், சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார், குழந்தையை பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையை முடுக்கி விட்டனர். ஏழாம் வகுப்பு சிறுமி பாலியல் பாலாத்காரம் செய்து கொலையா என்ற அதிர்ச்சி அடங்குவதற்குள், அடுத்த அதிர்ச்சியாக பக்கத்து வீட்டில் வசிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர் கைதாகிறார்.

அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. சம்பவம் நடந்த அன்று மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மாணவர், சிறுமியை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி உயிருக்கு போராடிய நிலையில், வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக மாணவியை கொல்ல முடிவெடுத்துள்ளார் அந்த மாணவர். அதன்படி, உயிருக்கு போராடிகொண்டிருந்த சிறுமியின் வாயிலும், கையிலும் மின் வயரை திணித்த மாணவர், அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் பரிதாபமாக துடிதுடித்து இறந்துள்ளார் அந்த 12 வயது சிறுமி. இவை அனைத்தையும் மாணவரிடம் இருந்து வாக்குமூலமாக பெற்ற போலீசார், அவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். ஏழாம் வகுப்பு மாணவி, 12 ஆம் வகுப்பு மாணவரால் பலாத்காரம் செய்யப்பட்டு மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொல்லப்பட்ட இந்த சம்பவம் , அந்த பகுதி முழுதுவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு